கண்கள் கட்டப்பட்டு படுகொலை!



முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளையே கொன்று புதைத்திருக்கிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்த தகவல் பிரகாரம்  துப்பாக்கி குண்டு உடையில் துளைத்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. ரொபி கடதாசி ஒன்றும் அதில் பகுப்பாய்விற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனை விட கண்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு சான்றாக கண்ணுக்கு கட்டும் துணி கூட எடுத்ததை காணமுடிந்தது.

வ்வகையில் 2009 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சரணடைந்த விடுதலை புலிகளை கண்ணை கட்டி துப்பாக்கியால் சுட்டு அல்லது சித்திரவதை செய்து கொலை செய்து புதைத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளதாகவும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மனிதப் புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் புஸ்பரட்ணம் இன்று இணைந்துள்ளார்.

மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமையன்;று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் (08) இன்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ருந்தது.

இந்நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஸ்பரட்ணம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments