டோக்கியோ சீமெந்து:பொன்னாவெளி இல்லை!சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள யப்பானிய டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் கிளிநொச்சியின் பூநகரி பொன்னாவெளி திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆதரவளிக்க பின்னடித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில், அரச அமைச்சர் டக்ளஸ் தவிர்ந்த ஏனையோர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

கூட்டத்திற்கு, மக்கள் பிரதிநிதிகளிற்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயக பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கவில்லை என தெரியவருகின்றது.

இதனிடையே இன்று மாலை பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலை தொடர்பில் கூடிய கூட்டத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் காலை வேளை கூட்டப்பட்ட கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் நீண்ட வாதப்பிரதிவாதங்களையடுத்து யப்பானிய டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் கிளிநொச்சியின் பூநகரி பொன்னாவெளி திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அனுமதி வழங்குவதை பின்போட்டுள்ளது.


No comments