காற்றாலைகளிற்கான எதிர்ப்பு வலுக்கிறது!இந்திய அதானி குழுமத்தின் காற்றாலைகளிற்கான எதிர்ப்பு மன்னாரில் நீடிக்கின்றது.

எனினும் பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை அமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே இலங்கை காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் முயற்சிக்கு இன்றும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகள் இன்று(6) காலை வருகை தந்து மன்னார் பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்ட மும்மொழி கொண்ட அறிவுறுத்தல் விளம்பரம் சம்பந்தப்பட்ட காணியில் பார்வைக்கு ஒட்டப்பட்டது.

அறிவித்தல் பிரசுரத்தில் 'மன்னார் காற்று மின் செயற்றிட்டம் இரண்டாம் கட்டமாக தேவையான புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்குமே காணி சுவீகரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே திருகோணமலை - புல்மோட்டை தொடக்கம் நிலாவெளி வரையான கடற்கரைப் பகுதிகளில் புவி சத்திரவியல் சுரங்க திணைக்களத் தலைவரின் தன்னிச்சையான ஒப்பந்தத்தின் மூலம் கனிய மணல் அகழ்வதற்கான ஆராய்வு செய்வதற்கான அளவீடு நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments