நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு


மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்றிரவு 11.11 மணிக்கு குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் மாரகேஷக்கு தென்மேற்கு பகுதியில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் தேசமாக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments