வவுனியாவில் விபத்து ; பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


வவுனியாவில்  இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

கண்டியை சேர்ந்த புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளான கருணாதிலக்க (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். 

ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விளக்கு வைத்த குளம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் , வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். 


No comments