யாழில். பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் உயிர்மாய்ப்பு
பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த 3ஆம் திகதி காரைநகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்ற போது , குறித்த சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
அவ்வேளை அவர் காப்பாற்றப்பட்டு , காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
Post a Comment