யாழில். விபத்தில் சிக்கிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நல்லூர் பகுதியில் கடந்த 4ஆம் திகதி குறித்த மூதாட்டி வீதியை கடக்க முயன்ற போது , வீதியால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானார்.
விபத்து படுகாயமடைந்த மூதாட்டியை வீதியால் சென்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment