400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு


400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் 77 வகையான மருந்துகள் பற்றாக்குறையாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments