முல்லைத்தீவில் விபத்து ; இரு இளைஞர்கள் உயிரிழப்பு


முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

முள்ளியவளை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments