ஐ. நா மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றது


”ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

” ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து  இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் எமது மக்களின் கோரிக்கையாகவும் ஆவலாகவும் உள்ளது. 

ஆனாலும் ஐ.நா சபையிலே தீர்மானங்கள் வருகின்ற போதேல்லாம்  இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையை ஏமாற்றுகின்ற வகையிலே காலங்கள் கொடுக்கப்படாலும் அவற்றை நடை முறைப்படுத்தாது தொடர்ந்தும் கால நீடிப்பை பெறுவதற்கான உத்திகளை கையாண்டு வருகின்றது.

அதற்கு ஏற்ற வகையில் ஐ.நா சபையும் அவர்களுக்கு வாய்பை வழங்கி வருகின்றது.  இதனால் தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments