கிளிநொச்சியில் கசிப்பு கும்பலை துரத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு


கசிப்பு கும்பலை துரத்தி சென்ற நிலையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மாத்தறையை சேர்ந்த , சதுரங்க (வயது 28) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை பொலிஸ் குழு முற்றுகையிட்டது. அதன் போது , அங்கிருந்தவர்கள் காட்டு வழியே தப்பியோடியுள்ளனர். 

தப்பி ஓடியவர்களை , பொலிஸார் துரத்தி சென்ற வேளை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரை தேடும் பணியில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டு இருந்தவேளை , காணாமல் போன பொலிஸ் உத்தியோகஸ்தர் புதுஐயன்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுளளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments