ட்ரம்புடன் ‘கோல்ஃப்‘ விளையாடிய தோனி!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ‘ எம்.எஸ். தோனி‘ அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பின் பேரிலேயே  தோனி கோல்ஃப் விளையாடச் சென்றுள்ளார் எனக்  கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் கோல்ஃப் விளையாடும் வீடியோவானது தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.

இதேவேளை இதற்கு முன்னர்    கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரவ் இடையே நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்று போட்டியை  தோனி நேரில் கண்டுகளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments