தொடரூந்துப் பாலம் இடிந்து விழுந்ததில் 26 பேர் பலி!!


இந்தியாவில் தொடரூந்துப் பாலம் இடிந்து விழுந்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிரோசம் மாநிலத்தில் ஒரு பள்ளத்தாக்கை கடக்கும் முயற்சியாக இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்தது. இதில் 26 தொழிலாளர்கள்  பலியாகியுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் குறித்து மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தாங் உயிரிழந்தவர்களை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் எக்ஸ் (ருவிட்டர்) தளத்தில் தெரிவித்தார்.

No comments