மகிழுந்து விபத்து: யேர்மனி ஹனோவரில் 4 பேர் பலி!!
வடக்கு யேர்மனியில் அமைந்துள்ள ஹனோவர் நரத்தில் அதிவேகமாக ஓடிய இரு மகிழுந்துகள் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 17 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என காவல்துறையினர் தொிவித்தனர்.
விபத்து நடந்த சம்பவ இடத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்ட போதும் சிகிற்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு இளம் பயணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் மகிழுந்துகளில் ஒன்று தவறான வழியில் ஓட்டியதால் மற்றொரு மகிழுந்துடன் நேருக்கு நேர் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மகிழுந்தில் சிக்கிய இருவரை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் அவசர சேவைகள் வருவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.
விபத்து தொடர்பான தகவல்களை வழங்குமாறு காவல்துறையினரிடம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment