இங்கிலாந்தில் 7 குழந்தைகளைக் கொன்ற தாதிக்கு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க உத்தரவு


பிரித்தானியாவில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைக் கொலை செய்த குற்றத்திற்காக தாதியான லக்கி லெட்பி (Lucy Letby) ஆயுட்காலச் சிறைத் தண்டனையை பிரிட்டன் நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

செஸ்டன் மருத்துவமனையில் பணியாற்றி 33 வயதுடைய  தாதி லெட்பி ஏழு குழந்தைகளைக் கொலை செய்ததற்காகவும் மேலும் ஆறு குழந்தைகளை கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

லெட்பி வேண்டுமென்றே குழந்தைகளுக்கு காற்றை செலுத்தினார். குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக பால் ஊட்டினார் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு இன்சுலின் விசம் ஏற்றினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட நீதிமன்ற அமர்வில் லெட்பி சமூகமளிக்க மறுத்துவிட்டார்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒன்று என்ற கணக்கில் லெட்பிக்கு பல முழு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. து போன்ற தண்டனையைப் பெற்ற இங்கிலாந்து வரலாற்றில் நான்காவது பெண் இவராவார்.

ஜூன் 2015 மற்றும் ஜூன் 2016 க்கு இடையில் லெட்பியின் செயல்களின் "கொடுமை மற்றும் கணக்கீடு" "உண்மையில் பயங்கரமானது" என்று நீதியாளர் ஜஸ்டிஸ் கோஸ் கூறினார்.

குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது போன்ற சாதாரண மனித உள்ளுணர்விற்கு முற்றிலும் முரணான வகையில் நீங்கள் நடந்து கொண்டீர்கள், மேலும் மருத்துவம் மற்றும் கவனிப்புத் தொழில்களில் பணிபுரிபவர்கள் மீது அனைத்து குடிமக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலும் மீறுகிறது என்று அவர் கூறினார்.

இந்த விசாரணையின் போது, ​​உங்கள் தவறுக்கு எந்தப் பொறுப்பையும் நீங்கள் வெளிப்படையாக மறுத்துவிட்டீர்கள் என்று நீதியாளர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனயைில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செஸ்டர் மருத்துவமனயைில் லூசி லெட்பி என்ற தாதி சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன.

No comments