காணியை காணோம்:றிசாட்

 
அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே தற்போது மக்களின் பாவனைக்காக எஞ்சியிருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நான் அமைச்சராக இருந்த போது, முசலிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கெதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன், மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டுமென தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அண்மையில் முல்லைத்தீவிழும் வவுனியாவிலும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் முசலிப் பிரதேசத்தில் எதுவுமே விடுவிக்கப்படவில்லை. ஜனாதிபதி காணிகளை விடுவிக்குமாறு கூறுகின்றார். 1984ஆம் ஆண்டுக்கு பின்னர், வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு அவர் கூறுகின்றார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் கூட்டத்தில், முசலிப் பிரதேசத்தில் ஒரு துண்டுக் காணியையேனும் விடுவிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவில்லையெனவும் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.


No comments