பாகிஸ்தான் பயணிகள் தெடரூந்து தடம் புரண்டதில் 30 பேர் பலி


தெற்கு பாகிஸ்தானில் தொடரூந்து தடம் புரண்டதில் குறைந்தது 30 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து சுமார் 275 கிமீ (171 மைல்) தொலைவில் உள்ள நவாப்ஷாவில் உள்ள சஹாரா தொடருந்து நிலையம் அருகே ஹசாரா எக்ஸ்பிரஸின் பல தொடரூந்து பெட்டிகள் கவிழ்ந்தன.

காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  உருக்குலைந்த இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பாக்கிஸ்தானின் பழங்கால தொடரூந்து பாதையில் விபத்துக்கள் அசாதாரணமானது அல்ல.

தொடரூந்து அமைச்சர் சாத் ரபீக் கூறுகையில், தொடருந்து சாதாரண வேகத்தில் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

கராச்சியில் உள்ள தொடருந்து செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குறைந்தது எட்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறின.

உள்ளூர் ஒளிபரப்பாளரான ஜியோவின் கூற்றுப்படி, சிலர் இன்னும் தொடரூந்து பெட்டிக்குள் சிக்கியுள்ளனர்.

என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் உள்ளே அமர்ந்திருந்தோம் என்று ஒரு திகைத்துப்போன பெண் கூறினார். ஒரு தடம்புரண்ட தொடரூந்திலிருந்து  மீட்கப்பட்டவர்கள் நோயாளர் காவு வண்டிகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments