தமிழீழம் அல்ல:சமஸ்டி கேட்டாலும் இரத்த ஆறு ஓடுமாம்!
சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
உதய கம்மன்பில அவர் மேலும் கூறுகையில், சம்பந்தன் அணியினர் கிடைக்க மாட்டாத ஒன்றைத் திருப்பித் திருப்பிக் கேட்டால் கிடைக்கும் என்று எண்ணுகின்றனர்.
கிடைக்க மாட்டாத சமஷ்டியைக் அவர்கள் கேட்பதால், அதில் விடாப்பிடியாக இருப்பதால் இன முரண்பாடு மேலும் உச்சமடையும் என தெரிவித்த உதய கம்மன்பில, மீண்டும் இரத்தக்களரிதான் ஓடும் எனவும் கூறினார். நாட்டில் இன முரண்பாடு உக்கிரமடைய நாம் விரும்பவில்லை. ஆனால், அந்த மோசமான நிலைமையைத் தமிழ்த் தலைவர்கள் விரும்புகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அத்துடன் அதை வைத்து நீண்ட காலத்துக்கு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடுகின்றனர் எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
Post a Comment