ஜதேக வழங்கிய துப்பாக்கிகள் எங்கே??



ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்ந்தும் புழக்கத்திலுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது

 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட 700 துப்பாக்கிகள் மீளக் கொடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 10 வருட காலப்பகுதியில் 154 அரசியல்வாதிகளுக்கு 698 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அரசியல்வாதிகளின் பட்டியலும், அவர்கள் ஒப்படைக்கத் தவறிய ஆயுதங்கள் பற்றிய விபரமும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனினால் இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த ஆவணங்களின்படி, துப்பாக்கிகள் பெரும்பாலும் 9எம்எம் பிஸ்டல்கள், ரிவால்வர்கள் மற்றும் 12 போர் ஷாட்கன்கள். சில அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பிக் கொடுக்கத் தவறிய சிலர் தற்போது உயிருடன் இல்லை.


இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது, இந்த துப்பாக்கிகள் எதற்காக வழங்கப்பட்டன என்பதை குறிப்பிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் எந்த ஆவணங்களும் இல்லை, ஆனால் 1980-1990 காலப்பகுதியில் நாட்டில் நிலவிய சூழ்நிலையின் காரணமாக இது அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக இருக்கலாம். அழகப்பெரும எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், 1990 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு எந்த தானியங்கி துப்பாக்கிகளையும் வழங்கவில்லை என்று கூறினார்.

No comments