நல்லூர் கொடியேறியது!



வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா,  25 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

பின்னர், செப்டெம்பர் 14 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இன்றிலிருந்து தொடர்ந்து 25 நாட்கள் இம் மகோற்சவம் இடம்பெறவுள்ளது.

இதனிடையே நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று (20) முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே வீதிகள் திறந்து விடப்படும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, நல்லூர் ஆலய வீதித் தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியைத் தவிர எந்த வாகனமும் உட்செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.




No comments