கடலில் மகனை காணோம்
கடலுக்குச் சென்று காணாமல் போன தனது மகனை தேடித் தருமாறு தாயொருவர் கோரிக்கைவிடுத்துள்ளார்..
கடந்த 04ம் திகதியன்று கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்துத் தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 04 அன்று கடலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், அவரை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கிப் பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை பருத்தித்துறை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனது மகன் வீடு திரும்பாத நிலையில் பருத்தித் துறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸாரும் அவரை தேடி வருவதாகவும், மேல் அதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தாயார், அவரை மீட்டுத் தருமாறும், கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே வேளை இந்தியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு காணாமல் போனவர் கஞ்சா கடத்தலிற்காக இந்தியா வந்தவேளை தவறியுள்ளதாகவும் தெரிவித்ததாகவும் அன்றிலிருந்து அவரது தொலைபேசி செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment