ஏட்டிக்குப்போட்டி:இலங்கை மீனவர்கள் மீது வழக்கு! இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 46 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அண்மையில் இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆர்காட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கில் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கியதாக தமிழக ஊடங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த தாக்குதலில் 5 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை சேதமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments