யாழில் கடும் வறட்சி ; 70 ஆயிரம் பேர் பாதிப்பு


வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில், 

தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21714 குடும்பங்களைச் சேர்ந்த 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர்  பிரிவுகளில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19704 பேருக்கு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

No comments