யாழில். முதலுதவி பயிற்சிப் பாசறை


சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் இலங்கை சென்.ஜோன் அம்பியுலன்ஸ் சேவையினரை வளவாளர்களாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவி பயிற்சிப் பாசறை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 2.00 மணி வரை யாழ்ப்பாணம் முதலாம் குறுகுத்தெருவில் அமைந்துள்ள புனித ஜோன் அம்பியுலன்ஸ் சேவை பணினையில் இடம்பெறும்.

பயிற்சியில் கலந்துகொள்ளபவர்களுக்கான சர்வதேச ரீதியிலான சான்றிதழ் கட்டணமாக பாடசாலை மாணவர்களுக்கு 300.00 ரூபாவும் எனையவர்களுக்கு 1250.00 ரூபாவும் அறவிடப்படும்.

 மேலதிக விபரங்களை பெற 0756322173 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். மேலும் பாடசாலை மாணவர்களை  இவ் நிகழ்வில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்

No comments