குற்றச்சாட்டுக்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை


தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பொதுமக்களது நிதியை துஷ்பிரயோகம் செய்ததில்லை என அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒருவரின் பணப் பரிவர்த்தனை தொடர்பாக இந்த நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நாட்டு மக்களின் பணத்தில் ஒரு சதம் கூட நானோ அல்லது எனது கட்சியைச் சேர்ந்த எவரும் திருடவில்லை அல்லது வீணடிக்கவில்லை.

அவ்வாறு மக்களின் பணம் திருடப்பட்டாலோ அல்லது வீணாக்கினாலோ இப்படி அரசியல் செய்ய முடியாது.

அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை கண்டு நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

எமது கட்சி பிரபலமடைந்து வருவதால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments