தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளர் காலமானார்


தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

திடீர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் கடந்த 09 வருட காலமாக அதிபராக கடமையாற்றி இந்த வருட ஆரம்பத்தில் ஓய்வு பெற்று இருந்தார். 

No comments