வீட்டில் வறுமை ; சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பெரிய தந்தை


வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். 

வறுமை காரணமாக 17 வயதான மகளை , தந்தையின் அண்ணா (சிறுமியின் பெரியப்பா) வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர். 

அந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்றைய தினம் சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments