யாழில். நிலவும் அதிக வெப்பத்தினால் முதியவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை , வீட்டார் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

அதிக வெப்பம் காரணமாக குருதி ஓட்ட குறைவினால் மரணம் சம்பவித்துள்ளது என  அறிக்கையிடப்பட்டுள்ளது. 

No comments