மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார்


மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில், 

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்தமுறையில் நாட்டில் ஆட்சியை கொண்டு சென்றது நல்லாட்சி அரசாங்கமே.

தற்போது தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள், மீனவர்களோ, பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை.

மேலும் பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாகி உள்ளது என்றும் இதனை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை.

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு தனக்கு எந்த சிரமமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments