வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை யாழில்


யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் , சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார் வாகன பதவி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவற்றுடன்  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு , குறித்த திகதிகளில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறித்துக்கொள்ள முடியும் என யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். 

No comments