யாழில். காய்ச்சலினால் பெண் உயிரிழப்பு
தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி (வயது 46) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் . தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சலின் தீவிர தன்மை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Post a Comment