யப்பான் வீதி :கிளிநொச்சி பொன்னாவெளிக்கு!கிளிநொச்சியின் பொன்னாவெளி கிராமத்தை ஆக்கிரமித்து சீமெந்து தொழிற்சாலை அமைக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் மும்முரமடைந்துள்ளது.

இதனிடையே உள்ளுர் மக்களது எதிர்ப்பினை தாண்டி இலங்கை அரசு பொன்னாவெளி பகுதியை யப்பானிய அரசிற்கு தாரைவார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உள்ளுர் மக்களது எதிர்ப்பினை போக்க வீதிகளை அமைத்துக்கொள்வதுடன் அதனை தமது போக்குவரத்திற்;கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே அப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அமைப்பினை டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு முயற்சி வெற்றியென ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு நின்று போயிருந்த பல்லவராயன்கட்டு-கிராஞ்சி- வேரவில்-பொன்னாவெளி 18 கி.மீ வீதி புனரமைப்பு வேலை, மீண்டும் எதிர்வரும் ஞாயிறு காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வீதி அமைப்பு தொடர்பில் தொடர்புடைய வீதி அபிவிருத்தி திணைக்கள வட்டாரங்கள் தமக்கு தகவல்கள் கிடைக்கவில்லையென அறிவித்துள்ளன.


No comments