முட்டையின் விலை 35 ரூபாய்


லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்தில் இருந்து அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 100,000 முட்டைகளை சந்தைக்கு வெளியிடப்படும் என நம்புவதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

முட்டைகளை இறக்குமதி செய்த போதிலும், உள்ளூர் விலையில் மாற்றம் இல்லாதால், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்க வர்த்தக அமைச்சு முடிவு செய்துள்ளது.

No comments