யாழில். தனது வீட்டு பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு


தனது வீட்டு, பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது 67) எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டு பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது,  மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து, அவரைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியரால் அறிக்கையிடப்பட்டது. 

உடற் கூற்று பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments