யேர்மனியில் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது!


யேர்மனியின் மேற்கு மாநிலமான நோர்ட் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யேர்மன் அரச வழக்கறிஞர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் யேர்மனியில் ஒரு பயங்கரவாதக் குழுவை நிறுவியதாகவும், "இஸ்லாமிக் ஸ்டேட்" (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், ஐந்து பேர் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் கார்ல்ஸ்ரூஹலவில் உள்ள பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2022 இல் உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே யேர்மனிக்குள் நுழைந்ததாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர்களின் நோக்கம் யேர்மனியில் உயர்மட்ட தாக்குதல்களை" நடத்துவதாகும், மேலும் அவர்கள் ஏற்கனவே இலக்குகளை ஆராய்ந்து ஆயுதங்களை வாங்க முயன்றனர்.

ஏழு பேரில் ஆறு பேர் "ஏப்ரல் 2022 முதல் IS க்காக பணம் சேகரித்து வருகின்றனர் என்றும் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுவிற்கு திரும்பத் திரும்ப நிதி அனுப்பியுள்ளனர் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

நோர்ட் ரைன் வெஸ்ட்பாலியாவில் நால்வரையும் மற்ற மாநிலங்களில் மூவரையும் கைது செய்தனர்.

No comments