மீண்டும் குறைகின்றது சமையல் எரிவாயு விலை


உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி புதிய விலைகள் இன்று நள்ளிரவுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 452 ரூபாயினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 181 ரூபாயினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 83 ரூபாயினாலும் லிட்ரோ நிறுவனம் குறைத்தது.

No comments