4வது நாளாகவும் தொடரும் போராட்டம்: பிரான்சில் நேற்றிரவு 1300 பேர் கைது!


17 வயது இளைஞன் பிரெஞ்சு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சில் நான்காவது நாளாகவும் வன்முறைகள் தொடர்கின்றது. 

17 வயது இளைஞனை இறுதி அடக்கம் முறைக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் தயாரான நிலையில், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. நேற்று மட்டும் 1300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸைச் சுற்றியுள்ள நகரங்களில் நான்காவது இரவு கலவரம் வெடித்தது.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் வன்முறை குறையத் தொடங்கியதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சேதம் பரவலாக இருந்தது.

சனிக்கிழமை அதிகாலையில் பிரான்ஸ் முழுவதும் 1311 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெள்ளியன்று 45,000 காவல்துறை அதிகாரிகள் இலகுரக கவச வாகனங்களின் ஆதரவுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இருந்தபோதிலும், Lyon, Marseille மற்றும் Grenoble நகரங்களில் கொள்ளையடித்தல், வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கத் தீவைத்தலில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

அமைதியான மற்றும் கடுமையான காவல்துறைக்கு அரசாங்கம் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் வன்முறையை நடந்துள்ளது.

கிழக்கு நகரமான ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஆப்பிள் நிறுவனத்திலன் களஞ்சியக் கடை சூறையாடப்பட்டது. பாரிஸ் பகுதி வணிக வளாகத்தில் உள்ள துரித உணவு கடையின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கு மூடப்பட்ட கடைக்குள் நுழைய முயன்றவர்களை அதிகாரிகள் விரட்டியடித்தனர்.

தெற்கு துறைமுக நகரமான மார்சேயில் அதன் இரண்டாவது இரவு எழுச்சியை அனுபவித்தது. இங்கும் கடைகள் துப்பாக்கி முனையில் சூறையாடப்பட்டன. வாகனங்கள் கட்டிடங்களுகுக்கு தீ வைக்கப்பட்ன. வேட்டைத் துப்பாக்கியுடன் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டார்.

பிரெஞ்சு கயானாவில், வியாழன் இரவு, தலைநகர் கயென்னில் கலவரக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், 54 வயதுடைய ஒருவர் தவறான தோட்டாவால் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனில், எதிர்ப்பாளர்கள் குப்பைத் தொட்டிகளை எரித்தனர். வாகனங்களையும் கட்டிடங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். 150 காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

No comments