கல்வியங்காட்டில் சிறுமி உயிர்மாய்த்த சம்பவம் ; இரண்டு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணையில்


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்,

No comments