வவுனியா தோணிக்கல் சம்பவம் ; கணவனும் உயிரிழப்பு


வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் ஆடிய வெறியாட்டத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 23 ஆம் திகதி குறித்த வீட்டினுள் புகுந்த காடைக்கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தி அவர்களுக்கு தீ வைத்தது. 

குறித்த சம்பவத்தில் , 23 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் நான்கு சிறுவர்கள் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 

அதில் சுகந்தன் (வயது 33) எனும் நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். 

சம்பவ தினத்தன்று உயிரிழந்த பெண்ணின் கணவரே இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments