மன்னாரில் வாகனம் எரிந்து நாசம்: ஓட்டுநரும் உதவியாளரும் உயிர் தப்பினர்


மன்னார், முருங்கன் இசை மாலைத்தாழ்வு பகுதியில் நேற்று (14) வாகனம் ஒன்று முழுமையாக தீ பற்றியெறிந்த நாசமாகிய நிலையில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இயந்திர பகுதி திடிரென தீப்பற்றிய நிலையில் வாகன சாரதி மற்றும் உதவியாளர் வாகனத்தில் இருந்து வெளியேறி வாகனத்தில் இருந்த பொருட்களையும் அகற்றி உள்ளனர்.


No comments