ஊரில் வெளிநாட்டு காசு படுத்தும் பாடு?



யுத்தம் முடிந்து பாதுகாப்பாக  ஊர் திரும்பும் புலம்பெயர் உறவுகள் சில மீண்டும் அலப்பறைகளில் ஈடுபட்டுள்ளன.

.ஏட்டிக்கு போட்யாக தாம் நடத்திய திருவிழா ஒன்றில் பறக்கவிட்ட உலங்கு வான் ஊர்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பதிவர் ஒருவர்:ஈழத்தில் அமைந்துள்ள கோயிலொன்றின் திருவிழாவினை யூடியூப் சனல்களில் இன்று பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது காரணம் அந்தக்கோயிலுக்கு சென்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலின் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு மேலாகவும் கோயிலுக்கு மேலாகவும்   தாழ்வாகப் பறந்தபடி ஹெலிக்கொப்டரில் இருப்போர் பூக்களைத் தூவுகிறார்கள் அது அவர்களின் நம்பிக்கை அதைப்பற்றிக் கவலையில்லை ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்குமேலே பறந்துகொண்டிருக்கும் அந்தக் ஹெலிக்கொடருக்கு அருகே யாரோ ஒருவரின் ட்ரோன் ஒன்று சுற்றிச்சுழன்றுகொண்டிருக்கின்றது.  இது எப்பேற்பட்ட அபாயத்தை ஏற்படுத்தும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளும் திறமையில்லாமல் மனிதர்கள் கும்பிட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.

மேற்குலக நாடுகளில் விமானங்கள் ஹெலிக்கொப்டர்கள் பறக்கும் இடங்களிலோ அருகிலோ ட்ரோன்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது அதை எவரும் மீறுவதில்லை அப்படி மீறுவது பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இலங்கையில் சர்வசாதாரணமாக ஹெலிக்கொடரைச் சுற்றி ட்ரோனைப் பயன்படுத்துகிறார்கள் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தைப்பற்றி எவருக்கும் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.

ட்ரோன்கள் தவறுதலாக ஹெலிக்கொடரில் மோதும்பட்சத்தில் அது வெடித்துச்சிதறி மிகப்பெரும் அழிவை அந்தச்சூழலிலும் அதில் பறப்பவர்களுக்கும் ஏற்படுத்திவிடும் இதனால்தான் ட்ரோன்கள் விமானங்கள் இறங்கும் ஏறும் விமான நிலையங்களுக்கு அருகிலும் ஹெலிக்கொப்டர்கள் இறங்கி ஏறும் வைத்தியசாலைத்தளங்கள் மற்றும் உயர்ந்த கட்டடங்களுக்கு அருகிலும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு மேலேயும் பறப்பது மேற்குலகில் தடைசெய்யப்பட்டுள்ளது, இந்த அபாயத்தை இனியாவது ட்ரோன் பிரியர்கள் புரிந்துகொள்ளுங்கள்.

இனிவருங்காலத்தில் நீங்கள் கோயில்களுக்கு ஹெலியில் சென்று பூக்கள் தூவுங்கள் ஏன் தங்கக்கட்டிகளைக் கொண்டு சென்று கொட்டுங்கள் ஆனால் ட்ரோன்கள் பறப்பதை அனுமதியாதீர்கள் அப்படியில்லாது அனுமதித்தீர்களானால் நீங்கள் ஹெலிக்கு  செலவழித்ததைப் பற்றியும்   கொட்டிய பூவைப்பற்றியும் பெருமிதமாகக் கூறுவதற்கு அதைப்பார்க்க முண்டியடித்த யாரும் இருக்க மாட்டார்கள் ,உங்களின் பக்தி உங்களின் புத்தியை மந்தமடையச் செய்யும் எபதைப் புரிந்து செயற்படுங்கள் .

No comments