ரணில் நாட்டிலில்லை:பேச்சு!ரணில் இலங்கையில் இல்லாத நிலையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் தினேஸ் குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பான உத்தேச செயற்பாடுகள் குறித்து பிரதமரிடம் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் விமான போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.


டிஜிட்டல்மயமாக்கல், மாற்று சக்திவளம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இந்திய முதலீடுகளை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஸ் குணவர்தன இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


.

No comments