ரஷ்ய நகரம் மற்றும் இராணுவ கட்டளை மையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது வாக்னர் படைகள்


ரஷ்ய இராணுவ ஒப்பந்ததாரர் வாக்னர் குழுமத்தின் தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் "தேசத்துரோக" குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், 

வாக்னர் போராளிகள் துரோகிகள் அல்ல, 'தேசபக்தர்கள்'  புடின் எங்களைத் தவறாத நினைக்கிறார் என்று யெவ்ஜெனி பிரிகோஜின் கூறுகிறார்.

வாக்னர் தனியார் கூலிப்படையின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் உக்ரைனில் உள்ள பாக்முட் மீதான ரஷ்ய தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது படைகள் உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லை நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானுக்குள் நுழைந்த பின்னர், யாரை வேண்டுமானாலும் எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

சனிக்கிழமையன்று, ப்ரிகோஜின் சமூக ஊடக செயலியான டெலிகிராமில் ஒரு காணணொலிச் செய்தியை வெளியிட்டார். விமானநிலையம் உட்பட நகரத்தில் உள்ள இராணுவ வசதிகளை தனது படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறினார்.

முன்னர் வாக்னர் கூலிப்படை தலைவர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட ரஷ்ய உத்தரவைத் மறுத்தார்.

வாக்னரின் மறுப்புக்குப் பிறகு செச்சென் படைகள் ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் உட்பட ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்கள், ரோஸ்டோவில் உள்ள நிர்வாகக் கட்டிடங்களையும் நகர மையத்தில் நிறுத்தப்பட்டுள்ள டாங்கிகளையும் ஆயுதமேந்திய வாக்னர் துணை இராணுவக்குழு சூழ்ந்திருப்பதைக் காட்டியது.

நாங்கள் அனைவரும் (25,000 பேர்) இறக்க தயாராக இருக்கிறோம்  வாக்னர் குழுமத்தின் தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் தெரிந்தார்.


 "நாங்கள் ரஷ்ய மக்களுக்காக இறக்கிறோம்."


 சனிக்கிழமையன்று அவசர தொலைக்காட்சி உரையில், வாக்னரின் "ஆயுதமேந்திய கலகம்" "தேசத்துரோகம்" என்றும், ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய எவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் புடின் கூறினார்.

No comments