யாழ்ப்பாணம் நோக்கி வந்த வாகனம் பளையில் விபத்து


யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கனரக வாகனம் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், முல்லையடி பகுதியில், வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


 

No comments