குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை அதிகமாக அறவிடும் வங்கிகள்


இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ள போதிலும், சில வங்கிகள் அதிக கடன் வட்டி வீதத்தை அறவிடுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை முதல் நாளிலேயே குறைத்தது.

நிலையான வைப்பு மற்றும் நிலையான கடன் வசதி விகிதங்கள் முறையே 13% மற்றும் 14% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக, நிலையான வைப்பு விகிதம் 15.05% ஆகவும், நிலையான கடன் வசதி விகிதம் 16.5% ஆகவும் இருந்தது.

இதன்படி, வர்த்தக வங்கிகளும் கடன் வட்டி வீதத்தை 02.05% குறைப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments