காங்கேசன்துறைக்கு வரவுள்ள இந்திய சொகுசு கப்பல்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இந்திய சொகுசு கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை வரவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு போன்ற கட்டடங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் , அவற்றினை நாளை மறுதினம் சனிக்கிழமை , துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சர் சிறிபால டீசில்வா தலைமையிலான குழு திறந்து வைக்கவுள்ளது.
அந்நிலையில் சென்னையில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு வந்த இந்திய சொகுசு பயணிகள் கப்பல் , தற்போது திருகோணமலை கடற்பரப்பில் தங்கி நிற்கும் நிலையில் சனிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment