பெண்ணை பலாத்காரம் செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவர் கைது


கணவனின் கண் முன்னே மனைவியை வன்புணர்ந்து , நகைகளையும் கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ள பொலிஸார் , மேலும் இருவரை தேடி வருகின்றனர். 

திருகோணமலை குச்சவெளி பகுதியில் , உள்ள வீடொன்றினுள் புகுந்த நால்வர் கொண்ட கும்பல் ஒன்று கணவனை தாக்கி விட்டு , மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் . 

பின்னர் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments