தகவல் கோரியவரிடம் பொலிஸ் ரிப்போர்ட் கேட்ட கொக்குவில் இந்து அதிபர்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவலை கோரியவரிடம் கிராம சேவையாளரிடம் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் , வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட சான்று பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண வலய கல்வி பணிப்பாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார். 

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி தொடர்பான சில தகவல்களை நபர் ஒருவர் கடந்த 02 ஆம் மாதம் 14ஆம் திகதி கோரியுள்ளார். 

அதனை அடுத்து கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் தகவல் கோரியவரின் கிராம சேவையாளர் ஊடக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் , வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்படும் உரிய சான்று பத்திரம் ஆகியவற்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு வலய கல்வி பணிப்பாளர் ஊடாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் கோரியுள்ளார். 

அதன் அடிப்படையில் கொக்குவில் இந்துக்கல்லூரி தொடர்பிலான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற விரும்பின் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தகவல்களை கோருமாறு வலய கல்வி பணிப்பாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

No comments