பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு


பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் , தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மிரிச துறைமுக பொலிஸாரினால் 47 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துப்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அந்நிலையில் குறித்த நபர் பொலிஸ் தடுப்பு காவலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

No comments