நோர்வேயின் மன்னர் மருத்துவமனையில் அனுமதி


நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை இன்று திங்கள்கிழமை அறிவித்தது.

மன்னருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதனால் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அரண்மணைச் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

86 வயதான மன்னர் சாதாரண நிலையில் இருப்பதாகவும், ஒஸ்லோவில் உள்ள ரிக்ஷோஸ்பிடலெட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் யேர்மனியின் சரணடைந்ததை நினைவுகூரும் வகையில் இன்ற திங்களன்று ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் மன்னர் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக அவரது மகனான இளவரசர் ஹாகோன் முன்னிலையாகியிருந்தார்.

No comments